ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு வெள்ளி காப்பு மஞ்சள் அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்..

X
Rasipuram King 24x7 |20 Oct 2025 9:28 PM ISTராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு வெள்ளி காப்பு மஞ்சள் அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள், மற்றும் வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.. அதன்படி இன்று தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்று ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு வெள்ளிக்காப்பு மஞ்சள், மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..
Next Story
