கரூரில் நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா தலைமையில் நடைபெற்றது
கரூரில் நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா தலைமையில் நடைபெற்றது நீத்தார் நினைவு நாள்" என்பது பொதுவாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை போன்ற பாதுகாப்புப் படையினர் பணியின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தும் நாள் ஆகும். 1959-ல் லடாக்கில் சீனப் படையுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த காவலர்களை நினைவுகூரும் விதமாக இந்த அனுசரிப்பு தினம் ஏற்படுத்தப்பட்டது. சில சமயங்களில், குறிப்பிட்ட துறையில் பணியின் போது இறந்த வீரர்களை நினைவு கூர்ந்து மற்ற நாட்களிலும் அனுசரிக்கப்படுகிறது. உதாரணமாக, தீயணைப்புத் துறையினர் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் பணியில் இறந்த வீரர்களின் நினைவாக இந்த நாளை அனுசரிக்கிறார்கள். இந்த நாள் வருடாந்தோறும் அக்டோபர் 21 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள போர் வீரர்கள் நினைவு தூண் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா தலைமையில் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்து கொண்டு உயிரிழந்த வீரர்களுக்காக மலர் வளையம் வைத்து புகழ் அஞ்சலி செலுத்தினார்.
Next Story










