புதுக்கனல்லி அருகே தந்தை மகன் நடந்து சாலையை கடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுவன் உயிர் இழப்பு.
புதுக்கனல்லி அருகே தந்தை மகன் நடந்து சாலையை கடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுவன் உயிர் இழப்பு. மதுரை மாவட்டம் அண்ணா நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் முத்து கதிரவன் வயது 35. இவரது மகன் ஜெகதீஸ்வரன் வயது 07. இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி அளவில் கரூர் - கோவை சாலையில் க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்கநல்லி பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்ற போது அப்பகுதியில் உள்ள சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர மோட்டார் வாகனம் ஒன்று நடந்து சென்ற தந்தை மகன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ஜெகதீஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் முத்து கதிரவன் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முத்து கதிரவன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் க.பரமத்தி காவல்துறையினர்
Next Story






