வெடிக்கு பதில் செடி வெடிகுண்டுக்கு பதில் விதை குண்டு வித்தியாசமாக மாசில்லா தீபாவளி

X
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விருவீடு வைகை பாரம்பரிய இயக்கம் சார்பில் மாசில்லா தீபாவளி கொண்டாடப்பட்டது வெடிக்கு பதில் செடி வெடிகுண்டுக்கு பதில் விதைகுண்டு என்ற நோக்கத்தில் இந்த இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் வெடிக்கு பதிலாக பொதுமக்களுக்கு செடிகளை வழங்கினர் இதை போல் வெடி பந்துகளுக்கு பதிலாக விதை பந்துகளை தயாரித்து தரிசு நிலப் பகுதிகளில் விதை பந்துகளை வீசி எரிந்து பசுமை தீபாவளியை கொண்டாடினர் மாசில்லாத தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் மற்றும் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடிய இந்த விழிப்புணர்வு தீபாவளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Next Story

