காவலர் நினைவு துணுக்கு எஸ்பி தலைமையில் மரியாதை!

காவலர் நினைவு துணுக்கு எஸ்பி தலைமையில் மரியாதை!
X
தூத்துக்குடியில் காவலர் நினைவு துணுக்கு எஸ்பி தலைமையில் மரியாதை!
காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் உள்ள காவலர் நினைவு துணுக்கு காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் 54 குண்டுகள் முழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி பணியில் இருக்கும் போது வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் காவலர் வீர வணக்கம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது இதையொட்டி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் அமைந்துள்ள காவலர்களின் நினைவு தூணுக்கு காவலர் வீர வணக்கம் நாளை முன்னிட்டு காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொட்டும் மழையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் பின்னர் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு 54 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், திபு தூத்துக்குடி நகர உதவி காவல் கண்காணிப்பாளர் மதன் மற்றும் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story