மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு
தூத்துக்குடியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது, இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி 9வது வார்டுக்கு உட்பட்ட பூபாலராயர்புரம் 2வது தெரு பகுதியில் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கொடுத்தனர். இதைஅடுத்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் உடனடியாக அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் வெள்ளநீர் தேங்காதவாறு கழிவுநீர் கால்வாயை உடனடியாக தூர்வார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், சிறிது நேரம் அங்கேயே நின்று பணிகளை துரிதப்படுத்தினார். உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், தகவல் தொழில்நுட்பப் பிரிவு அபிராமி நாதன் வட்டச் செயலாளர் பி. கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர் தனலட்சுமி, வட்ட பிரதிநிதி அந்தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story



