பணிகள் முடிவுறாத பாலத்தில் சென்றவர் பலி.

பணிகள் முடிவுறாத பாலத்தில் சென்றவர் பலி.
X
மதுரை திருமங்கலம் அருகே சாலை பணியின் நடைபெறும் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிர் இழந்தார்.
மதுரை திருமங்கலம் ராஜபாளையம் சாலையில் நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று (அக்.21) அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தடுப்பை தாண்டி சென்றபோது பள்ளம் இருப்பதை அறியாமல் பாலத்தின் மேல் இருந்து கீழே ஒருவர் விழுந்து இறந்தார்.இன்று காலை நடை பயிற்சி சென்றவர்கள் காயத்துடன் ஒருவர் இருப்பதைக் கண்டு அவரை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் இறந்தவர் துவரிரமானை சேர்ந்த காளிமுத்துவின் மகன் விக்னேஸ்வரன் என்றும் , காயமடைந்து இருந்தவர் அவருடைய நண்பர் முத்து வேல் என்றும் தெரிந்தது.போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story