கோவை – தீபாவளி கொண்டாட்டம் களைகட்டிய “ஐ லவ் யூ கோவை” பூங்கா!
தீபாவளி பண்டிகையையொட்டி கோவை “ஐ லவ் யூ கோவை” பூங்காவில் பொதுமக்கள் திரளாகக் குவிந்தனர். பல மாதங்களாக மூடப்பட்டிருந்த படகு இல்லம் மீண்டும் இயக்கப்பட்டதால், மக்கள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். குளக்கரையில் அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள், சிற்றுண்டி கடைகள், மற்றும் “ஐ லவ் யூ கோவை” செல்ஃபி ஸ்பாட்டில் மக்கள் தீபாவளி புத்தாடைகளுடன் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். மாநகராட்சி பராமரிப்பில் மீண்டும் தொடங்கப்பட்ட படகு சவாரி சேவையால், பூங்கா தீபாவளி நாளில் மகிழ்ச்சிக் களமாக மாறியது.
Next Story



