வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை – போலீசார் தீவிர வலைவீச்சு

வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை – போலீசார் தீவிர வலைவீச்சு
X
தூத்துக்குடி நள்ளிரவில் பயங்கரம்! வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை – போலீசார் தீவிர வலைவீச்சு
தூத்துக்குடி நகரில் நள்ளிரவில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் எனும் சூர்யா (20) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று (20.10.2025) நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில், சூர்யா தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தபோது, கிருஷ்ணராஜபுரம் 3வது தெரு பகுதியில் பின் தொடர்ந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க நால்வர் திடீரென வழிமறித்து தாக்கினர். அவர்கள் தங்களுடன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சூர்யாவை சரமாரியாக வெட்டியதில், அவர் ரத்தத்தில் தத்தளித்து கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து தாக்குதலாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். தகவல் அறிந்து உடனே வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கடுமையாக காயமடைந்த சூர்யாவை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலைக்கார கும்பலை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்ப விசாரணையில், கொலை செய்யப்பட்ட சூர்யா மற்றும் தாக்குதலாளிகள் இடையே முன்பகை மற்றும் குழு மோதல் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
Next Story