அருள்மிகு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா ஏற்பாடு தீவிரம்..

X
Rasipuram King 24x7 |21 Oct 2025 10:21 PM ISTஅருள்மிகு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா ஏற்பாடு தீவிரம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசத்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக் கோவிலில் ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ஐப்பசி 4 செவ்வாய்க்கிழமை இன்று இரவு அம்மனுக்கு பூச்சாட்டு விழா விமர்சையாக நடைபெறுகிறது.. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பக்தர்கள் பூந்தட்டு எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலில் வந்து பூக்களை வழங்கி வருகின்றனர். மேலும் விழா ஏற்பாடுகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது. தற்போது கோவிலில் ஆயிரம் கிலோவுக்கு மேலாக பூக்கள் பக்தர்களால் காணிக்கையாக கொண்டு வந்து அம்மனுக்கு கொடுத்துச் சென்றுள்ளனர்..
Next Story
