கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

X
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீடித்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அருவி பகுதி பார்வைக்கு மட்டும் திறந்துவைக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறை அறிவித்துள்ளது. விடுமுறை நாளை முன்னிட்டு அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதால், வனத்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

