திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் டன் டன் டன்னாக குவிந்த பட்டாசு கழிவுகள் அகற்றும் பணி

திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் தீபாவளியை ஒட்டி வெடிக்கப்பட்ட பட்டாசு குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒட்டுமொத்த தூய்மை பணியாளர்களையும் பட்டாசு கழிவுஅகற்றும் பணியில் ஈடுபடுத்திய நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபுமற்றும் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன
திருச்செங்கோடு நகராட்சி 33 வார்டுகளை கொண்ட ஒரு மிகப்பெரிய நகராட்சியாகும். தீபாவளி அன்று பொதுமக்கள் பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடினார்கள். பட்டாசு வெடித்து மீதமுள்ள பட்டாசு கழிவுகளைஅவ்வப்போது கூட்டி குவிக்காமல் அப்படியே தெருவில் போடுவது வாடிக்கையாக நடந்து கொண்டுள்ளது.எதனால் நகரின் அனைத்து தெருக்களிலும் பட்டாசு குப்பைகள் சிதறி கிடந்தது இதனை கண்ட நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆணையாளர் வாசுதேவன் ஆகியோர் ஒட்டுமொத்தமாக பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர் அதன் பேரில்  துப்புரவு அலுவலர் சோழராஜ் தலைமையில் இன்று தூய்மை பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.  மேலும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து பட்டாசு கழிவுகளை அகற்றினார்கள். இதுபோன்று அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால்  மிகவும் உறுதுணையாக இருக்கும் என துப்புரவு அலுவலர் சோழராஜ் கூறினார்.மழை பெய்து தெருவெல்லாம் ஈரமாக இருக்கும் நிலையில் மிகவும் சிரமப்பட்டு தூய்மை பணியாளர்கள் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
Next Story