செங்குந்தபுரம் அரசு பள்ளி கழிப்பறை அருகே கதண்டு கூடு மாணவர்கள் அச்சம்.

X
அரியலூர், அக்.22- செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் தென்னை மரத்தில் உள்ள கதண்டு கூட்டால் பள்ளி மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் குமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி கழிப்பறை அருகே தென்னை மரத்தில் கழண்டு கூட இருப்பதால் அவ்வழியே செல்லும் மாணவர்கள் அச்சத்துடனும் மிகுந்த பயத்துடனும் சென்று வரும் சூழல் இருப்பதால், அருகே தென்னைமர வீட்டு உரிமையாளர் சம்மந்தப்பட்ட தீயணைப்பு துறைக்கு புகார் மனு அளித்துள்ளனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை இல்லை என பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பள்ளி மாணவர்களுக்கு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க சம்பந்தப்பட்ட தீயணைப்பு துறையினர் கதண்டு கூட்டை அகற்றி மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

