கிராம மக்கள் சாலை மறியல் போலீசாருடன் வாக்குவாதம் பரபரப்பு
தூத்துக்குடி திருநெல்வேலி தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பொட்டலுரணி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஆண்கள் உள்ளிட்டோர் மீது காவல்துறை அராஜகமாக தாக்குதல் இரண்டு பேருக்கு காயம் குண்டுகட்டாக பெண்களை கைது செய்து சிறைப்படுத்தியதால் பரபரப்பு காவல்துறையினர் பொதுமக்கள் இடையே கடும் வாக்குவாதம் போர்க்களம் போல் ஆன தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை பொட்டலூரணி கிராம விலக்கு பகுதியில் தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் பொட்டலூரணி கிராமம் அருகே செயல்பட்டு வரும் மீன் கழிவுகளை மூட வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அவர்களுடன் வருவாய்த்துறை என பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கும்போதே அந்தப் பகுதியில் உள்ளே நுழைந்த ரூரல் டிஎஸ்பி சுதீர் சாலை மறியல் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட துவங்கினார் மேலும் பெண்கள் உள்ளிட்டோரையும் தாக்க துவங்கினர் இதில் சில ஆண் காவலர்களும் பெண்களை பிடித்து இழுக்க துவங்கினர் இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்யும் முயன்றனர் அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட செல்வ நாராயணன் என்பவருக்கு காவல்துறையினர் தாக்கியதில் கையில் காயம் ஏற்பட்டது மேலும் ஒரு பெண்ணிற்கு கால் முறிவு ஏற்பட்டது ஆனால் காவல்துறையினர் இது எதையும் கண்டு கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் பெண்கள் ஆகியவரை தங்கள் அராஜகத்தின் மூலம் கைது செய்து வேனில் ஏற்றினர் இதற்கு அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் அதையும் மீறி முதியவர்கள் பெண்கள் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து கொண்டு சென்றனர் இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது மேலும் காவல்துறையினர் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்து நிறுத்தி அராஜகத்திலும் ஈடுபட்டனர்
Next Story




