தடா கோவில் பிரிவில் டாட்டா நெக்ஸான் காரும் மாருதி ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதி விபத்து. மூன்று பேர் படுகாயம்.
தடா கோவில் பிரிவில் டாட்டா நெக்ஸான் காரும் மாருதி ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதி விபத்து. மூன்று பேர் படுகாயம். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கலைட்டின் திகிமான் வர்மா வயது 25. இவர்களது நண்பர்கள் மாற்றுவேதி சாய்வாஸ்மி வயது 26. சீகு சுனில்குமார் வயது 23.தாராபவன் அசோக்குப்தா வயது 33. இவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ARM ஐ டி நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றி வந்தவர்கள். இவர்கள் அனைவரும் டாடா நெக்ஸான் காரில் திங்கட்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் மதுரை-கரூர் சாலையில் அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட தடா கோயில் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது கோவை மாவட்டம் பி என் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் எதிர் திசையில் வேகமாக ஓட்டி வந்த ஆம்னி கார் டாடா நெக்ஸான் காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டாடா நெக்ஸான் காரை ஓட்டிய கலைட்டின் திகிமான் வர்மா லேசான காயங்களுடன் தப்பினார். ஆனால் இந்த காரில் பயணித்த மற்ற மூவரும் பலத்த காயமடைந்ததால் அவர்கள் அனைவரும் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக கலைட்டின் திகிமான் வர்மா அளித்த புகாரில் விபத்து ஏற்படும் வகையில் காரை ஓட்டிய செந்தில்குமார் மீது அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story




