ரெட்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.

ரெட்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
ரெட்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம். கரூர் ஆண்டங்கோவில் மேல்பாகம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஆசீர்வாதம் மகன் சாஜவிதான் வயது 20. இவர் திங்கட்கிழமை அன்று மதியம் 1.30 மணி அளவில் கரூர் - கோவை சாலையில் அவரது டூவீலரில் ரெட்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே வந்த போது எதிர் திசையில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பாளையம் முஸ்லிம் தெருவை சேர்ந்த மணிகண்டன் வயது 30 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் சாஜவிதான் ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சாஜவிதானை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தந்தனர். சம்பவம் குறித்து சாஜவிதான் அளித்த புகாரில் டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மணிகண்டன் மீது கரூர் மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story