மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு

X
கடந்த சில தினங்களாக தூத்துக்குடியில் பெய்த தொடர் கனமழையால் தூத்துக்குடி மாநகரம் - 16 வது வார்டுக்கு உட்பட்ட கதிர்வேல் நகர் பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதாக பொதுமக்களிடமிருந்து தகவல் வந்ததையடுத்து, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் அங்கு நேரில் சென்று அங்கு தேங்கி இருக்கும் வெள்ள நீரை வெளியேற்றும் வழிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய வெள்ள நீரை வேகமாக வெளியேற்றும் வகையில் தீயணைப்புத் துறை வாகனத்தை உடனடியாக வரவழைத்தார். இதனால் தற்போது கதிர்வேல் நகர் பகுதியில் தேங்கியிருக்கும் வெள்ள நீர் வேகமாக வெளியேறி வருகிறது. அப்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அபிராமிநாதன் மாமன்ற உறுப்பினர் கண்ணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story

