மயங்கி விழுந்து முதியவர் பலி

X
Komarapalayam King 24x7 |22 Oct 2025 5:10 PM ISTகுமாரபாளையம் அருகே முதியவர் வாகனத்தில் சென்றவர் மயங்கி விழுந்து பலியானார்.
ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்தவர் சிவகுமார், 51. இவர் அக். 17ல், குமாரபாளையம் அருகே, ஜே.கே.கே. நடராஜா கல்லூரி அருகே உள்ள, தன் உறவினர் துக்க வீட்டிற்கு டி.வி.எஸ். 50 வாகனத்தில் வந்தார். உடல்நிலை அசௌகரியம் ஏற்பட்டதால், வாகனத்தை நிறுத்தி விட்டு நின்ற போது, மயக்கம் வந்து கீழே விழுந்தார். இவரை அக்க பக்கம் உள்ளவர்கள், இவரது மகள் மோகனபிரியா, 23, வசம், மயங்கியவர் போன் மூலம் தகவல் சொல்ல, அவர் தன் உறவினரிடம் சொல்லி, காரில் அழைத்துக்கொண்டு, பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு 08: 45 மணியளவில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
