இளம் பெண்கள் பயிற்சி பாசறையை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.

இளம் பெண்கள் பயிற்சி பாசறையை கனிமொழி கருணாநிதி எம்பி துவக்கி வைத்தார்.
சென்னை வடகிழக்கு மாவட்ட மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் இளம் பெண்கள் பயிற்சி பாசறை இன்று (22/10/2025) சென்னை ரெட்டேரி லட்சுமிபுரத்தில் உள்ள GPL பேலஸில் நடைபெற்றது. சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, இளம் பெண்கள் பயிற்சி பாசறையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கலாநிதி வீராசாமி, திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர்.மதிவதனி, திமுக செய்தி தொடர்புத்துறை துணை செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி, திமுக மகளிர் அணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், திமுக மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் டாக்டர். ப.மீ.யாழினி, திருவெற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் வை.ம.அருள்தாசன், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கோமளவள்ளி, சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் M.அம்மு, திமுக நிர்வாககிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story