கிரசர் மேடு அருகே டூவீலர் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழப்பு.
கிரசர் மேடு அருகே டூவீலர் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா புஞ்சை காலக்குறிச்சி எல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் மணி வயது 60. இவர் செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 12:45 மணி அளவில் நொய்யல்- க.பரமத்தி சாலையில் கிரஷர் மேடு அருகே தனது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர் திசையில் கோவை மாவட்டம் காளப்பட்டி மோகன் நகரை சேர்ந்த அருண்குமார் வயது 44 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் மணி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மணிக்கு தலை இடது கால் முகம் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த மணியின் மனைவி செல்வி வயது 53 என்பவர் அளித்த புகாரில் காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டி விபத்து ஏற்படுத்திய அருண்குமார் மீது க. பரமத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story





