மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்!
கோவை அருகே உள்ள மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாக போற்றப்படும் இக்கோவிலில், விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி, யாகசாலை பூஜை, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி-தெய்வானை தம்பதியருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. விழா அக்டோபர் 28 வரை நடைபெறவுள்ளது. இதில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் மற்றும் திருவீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை வேல் வாங்கும் நிகழ்ச்சியும், மாலை சூரபத்மன் வதமும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், புஷ்ப பல்லாக்கில் வீதி உலா, மறுநாள் வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
Next Story



