நடிகர் விஜய்க்கு விஸ்வகர்மா அமைப்பு கண்டனம்!

X
தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்ம சமுதாய மக்களின் கூட்டமைப்பு சார்பில் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஸ்வகர்மா சமுதாயத்தின் விழிப்புணர்வு அரசியல் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்களின் கூட்டமைப்பு தேசிய செயலாளர் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் விஸ்வகர்மா சமுதாயத்துக்கு தேவையான உயர்கல்வி வேலைவாய்ப்பு ஒதுக்கீடு அல்லது மிகவும் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடுக்கான உத்திரவாதம் வழங்க வேண்டும், நம் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு திருக்கோவிலில் அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் பணி செய்ய உரிமை வழங்க வேண்டும் மற்றும் தொழில் கடன் வழங்க வேண்டும் மற்றும் அரசியல் அதிகாரத்தில் பங்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசியல் கட்சியினருக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசும் போது தாங்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று விஸ்வகர்மா மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது இந்த கருத்து கேட்பு கூட்டம் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆகியோரிடம் வழங்கப்படும் தாங்கள் கோரிக்கையை ஏற்கும் அரசியல் கட்சியினருக்கு தாங்கள் வரும் 2026 தேர்தலில் ஆதரவு அளிப்போம் என அவர் தெரிவித்தார் மேலும் கரூர் தவெக விஜய் பிரச்சாரத்தின் போது 41 பேர் பலியானோர் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறாதது கண்டனத்திற்குரியது என்றார் அவர் இன்னும் காலதாமதம் ஏற்படுத்தினால் அரசியலில் அவர் பின்னடைவை ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
Next Story

