பித்தளை சப்பரத்தில் முருகப்பெருமாள் எழுந்தருளி தரிசனம்

பித்தளை சப்பரத்தில் முருகப்பெருமாள் எழுந்தருளி  தரிசனம்
X
தூத்துக்குடி சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று துவங்கிய நிலையில் இரவு பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பித்தளை சப்பரத்தில் முருகப்பெருமாள் பாலமுருகன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் வழங்கினார்
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று துவங்கிய நிலையில் இரவு பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பித்தளை சப்பரத்தில் முருகப்பெருமாள் பாலமுருகன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் தரிசனம் தூத்துக்குடியில் அமைந்துள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது இதை தொடர்ந்து இன்று மாலை சஷ்டி மண்டபத்தில் முருகப்பெருமான் பாலமுருகன் அலங்காரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பித்தளை சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதை தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர் இதை அடுத்து நான்கு ரத வீதியில் வழியாக முருகப்பெருமான் பாலமுருகன் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்
Next Story