கோவை தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து காட்டு யானை உயிரிழப்பு!

X
கோவை தொண்டாமுத்தூர் அருகே குப்பேபாளையம், ராமன்குட்டை பகுதியில் நேற்று இரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் காட்டு யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானை, நாகராஜன் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்து உயர் மின் அழுத்த கம்பத்தை முட்டியதில் மின்கம்பி கீழே விழுந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் “ரோலக்ஸ்” என்ற காட்டு யானை பிடிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

