மழையால் பாதிக்கப்பட்டோரை சந்தித்த அமைச்சர்

X
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாஞ்சான்விடுதி ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக சிலரது வீடு சேதமடைந்தது. இதையொட்டி சேதமடைந்தவர்கள் பாப்பான்விடுதி கிராம சேவை மைய கட்டடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையறிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார்.
Next Story

