புதுக்கோட்டை: பள்ளியை புறக்கணித்த மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரி அந்த பள்ளியில் பயிலும் 110 மாணவர்கள் இன்று பள்ளிக்கு வராமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களின் பெற்றோருடன் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story





