வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்ததுள்ளதை கண்டித்தும், பள்ளிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர்கள் போராட்டம்.

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்ததுள்ளதை கண்டித்தும், பள்ளிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர்கள் போராட்டம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இந்திராநகர் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பாட்டு வருகிறது. இதில் சுமார் 300 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்திருக்கும் நிலையில் தினந்தோறும் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் கீழே விழுந்து காயம் ஏற்படுவதாகவும், பள்ளி வளாகத்தை சுற்றி மழை நீரோடு கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் அப்பகுதி மக்களுடன் இணைந்து பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பிர் கங்காதுரை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது அவரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி வளாகத்தை சுற்றி மழை நீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு கூட்டிச் சொல்ல வேண்டிய அவல நிலை நீடிப்பதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பள்ளிக்குப் போடப்பட்டு இருந்த பூட்டை திறந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான சூழல் காணப்பட்டது.
Next Story

