வால்பாறை அருகே கபாலி ஒற்றைக் கொம்பன் காட்டுயானை அட்டகாசம் – பேருந்து பயணிகள் அதிர்ச்சி!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கபாலி என அழைக்கப்படும் ஒற்றைக் கொம்பன் காட்டுயானை தொடர்ச்சியாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. கேரளா வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த யானைகள் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார தேயிலை தோட்டங்கள், குடியிருப்புப் பகுதிகள், சாலைகளில் அடிக்கடி உலா வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில், வால்பாறை – அதிரப்பள்ளி சாலையில், மழுகுப்பாறை அருகே அரசு பேருந்து செல்லும் வழியை மறித்து, மரங்களை இழுத்து வீசி அட்டகாசம் செய்தது கபாலி யானை. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பதட்டமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்த கேரளா வனத்துறையினர் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பினர்.
Next Story



