கோவை: வக்கீல் மீது தாக்குதல் - வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

X
திருச்சியில் சமூக விரோதிகள் ஒரு வக்கீலை குத்தி காயப்படுத்தி, அவரது தம்பி கொலை செய்யப்பட்டதை கண்டித்து கோவை கோர்ட்டு முன்பு வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோயம்புத்தூர் பார் அசோசியேஷன் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் சங்க தலைவர் பால கிருஷ்ணன் மற்றும் கூட்டுக் குழு தலைவர் நந்தகுமார் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள், தமிழ்நாட்டில் வக்கீல்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கூறி, வக்கீர்களை பாதுகாக்க உடனடியாக பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை தெரிவித்தனர்.
Next Story

