குமாரபாளையம் அருகே ஒரு லட்சம் மரம் நிகழ்ச்சி தொடக்கம்

X
Komarapalayam King 24x7 |23 Oct 2025 4:26 PM ISTபசுமையான தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வரும் படும் நிகழ்ச்சி தொடக்கம்
நாமக்கல் மேற்கு மாவட்டம் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் பல்லக்காபாளையம் ஊராட்சி ஆயிகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பொய்யேரி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக MGNREGS 2025-2026 ஆண்டிற்கான பசுமையான தமிழ்நாடு என்ற முன்னெடுப்பின் மூலம் பள்ளிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் தலைமையிலும் குமராபாளையம் வட்டாட்சியர் பிரகாஷ் முன்னிலையிலும் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் N.நாச்சிமுத்து கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார்......... மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் M.R.ராஜேந்திரன், A.ஜான்பீட்டர், S.ராஜ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.K.முரளி அவர்கள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மேட்டுக்கடை S.கார்த்திக் மற்றும் கழக நிர்வாகிகள் சிவகுமார், தண்டபாணி, மாதேஷ், குழந்தைவேல், செல்வன், விஜயகுமார், தனசேகரன், சிதம்பரம், ராஜேந்திரன் மற்றும் கிளை இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்......
Next Story
