தொடர் மழையால் சாலையில் தேங்கும் மழைநீர்

குமாரபாளையம் அருகே தொடர் மழையால் சாலையில் தேங்கும் மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் சாலை சேதமும் ஏற்பட்டு வருகிறது.
குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, வட்டமலை அருகே, தட்டான்குட்டை பிரிவு சாலை நுழைவுப்பகுதியில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. மேலும் சாலையும் சேதமாகி வருகிறது.இதன் அருகே வெற்றிடமாக இருப்பதால் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களும் வருகிறது. இதனால் பொதுமக்கள் இவ்வழியே செல்ல அச்சம் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளங்கள் இருப்பது தெரியாமல் பலரும் நிலை தடுமாறி விழுந்து பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே, இந்த இடத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story