டூவீலர்கள் மோதிய விபத்தில்

டூவீலர்கள் மோதிய விபத்தில்
X
குமாரபாளையம் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் தம்பதியர் படுகாயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர், சின்னதம்பி பாளையம் பகுதியில் வசிப்பவர் சங்கர், 48. விவசாய கூலி. இவரது குடும்ப விசேஷத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க வேண்டி, தன் மனைவி செல்வி, 42, என்பவருடன், அக்.19, மாலை 02:45 மணியளவில், எக்ஸல் கல்லூரி அருகே, டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் வந்தார். அப்போது அங்கு வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது, சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த யமஹா டூவீலர் ஓட்டுனர்,. இவர்கள் வந்த வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார். இதில் தம்பதியர் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான நபரை தேடி வருகின்றனர்.
Next Story