மாதாந்திர பராமரிப்பு பணிகள்- மின் வினியோகம் நிறுத்தம் . மின்வாரியம் அறிவிப்பு.
மாதாந்திர பராமரிப்பு பணிகள்- மின் வினியோகம் நிறுத்தம் . மின்வாரியம் அறிவிப்பு. நாளை 24-10-25 வெள்ளிக்கிழமை அன்று, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, நொய்யல், ராஜபுரம் மற்றும் ரங்கநாதபுரம் துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில், மின் வினியோகம் இருக்காது என கரூர் மாவட்ட மின்வாரியம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தங்கள் பணிகளை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
Next Story





