உயர்ரக மதுபான கடையை இடமாற்றம் செய்ய மனு

X
பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில், கடந்த வாரத்தில் உயர்ரக மதுபான கடை திறக்கப்பட்டது. காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த கடை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,கடை திறக்கப்பட்ட நாளிலிருந்து அதிகளவு மது பிரியர்கள் கடைக்கு வந்து செல்கின்றனர். மேலும் மிகவும் குறுகலான பிரதான சாலை என்பதால், மது போதையில் சாலையில் நடுவே படுத்து உறங்குவது, சண்டையிட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த உயர் ரக மதுபான கடையை வேறொரு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் ,நாமக்கல் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில்,மாவட்ட செயலாளர் க.உமாசங்கர் தலைமையில்,கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் முன்னிலையில், பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ,நவீன உயர் ரக மதுபான கடையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி மனு வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் மாவட்டத் தலைவர் முருகேசன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ஆர்.சி.முருகேசன், மாவட்ட துணை செயலாளர் கராத்தே சேகர் நகர செயலாளர் ராஜா என்கின்ற ராஜசேகர் , வன்னியர் சங்க நகர தலைவர் வெங்கடேசன் ,, நகர செயலாளர் சின்னதுரை, குமாரபாளையம் நகர செயலாளர் ராஜா ,தலைவர் குமார் ,ஒன்றிய தலைவர் சோமசுந்தரம்,, பள்ளிபாளையம் நகர நிர்வாகிகள், காளிதாஸ், கோவிந்தராஜ், ஆலாம்பாளையம் முருகன், ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .
Next Story

