தமிழக அரசை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

X
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில் வளைவு முறையாக அமைத்து தராத தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறையை கண்டித்து வடபாகம் நாட்டுப்படகு பஞ்சாயம் அனைத்து மீனவ மற்றும் சங்குளி சங்கங்ளின் கூட்டமைப்பினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில் வளைவு முறையாக அமைத்து தராத தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறையை கண்டித்து வடபாகம் நாட்டுப்படகு பஞ்சாயம் அனைத்து மீனவ மற்றும் சங்குளி சங்கங்ளின் கூட்டமைப்பினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் திரேஸ் புரம் கடற்கரையில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு முறையாக அமைக்கப்படாமல் ஒரு பகுதியில் பாதி அளவு தூண்டில் வளைவு போடப்பட்டு மீதி தூண்டில் வளைவு அப்படியே முழுவதுமாக போடாமல் நிறுத்தப்பட்டுள்ளது இதன் காரணமாக காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் காலங்களில் நாட்டு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்து பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மீனவர்கள் பாதிக்காத வண்ணம் தூண்டில் வளைவை முறையாக அமைத்து தர வேண்டும் என தமிழக அரசு மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றிற்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை நிதி ஒதுக்கப்படாமல் அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது இதைத்தொடர்ந்து தமிழக அரசு மீன்வளத்துறை தூண்டில் வளைவை முறையாக அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி இன்று திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரணமாக மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டு தூண்டில் வளைவு முறையாக அமைத்து தர வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
Next Story

