தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

X
தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்கள் நீண்டநாள் கோரிக்கையாக வைத்திருந்த சலுகை விலை வீட்டு மனை வழங்குதல் குறித்த பிரச்சினை இன்னும் தீர்வு காணப்படாததை கண்டித்து, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. தூத்துக்குடி பிரஸ் கிளப் செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு தமிழக அரசின் சலுகை விலை வீட்டு மனை நான்கு கட்டங்களாக வழங்கப்பட்டு உள்ள நிலையில், தூத்துக்குடி சார்ந்த பத்திரிகை மற்றும் ஊடக துறையினருக்கு கடந்த 30 வருடத்திற்கு திமுக அதிமுக என இரண்டு அரசிடம் தொடர்ந்து மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணித்து வரும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு கண்டித்து தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் கருப்பு உடை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் கலந்து கொண்டு சலுகை விலை வீட்டுமனை பட்டா விரைந்து வழங்கிட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பத்திரிக்கை மற்றும் ஊடக துறையினர் புகைப்பட கலைஞர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

