செய்யப்பகவுண்டன் புதூரில் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா.
செய்யப்பகவுண்டன் புதூரில் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுக்கா தாளப்பட்டி கிராமத்தில் உள்ள செய்யப்ப கவுண்டன் புதூரில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. மங்கல இசையுடன் இன்று அதிகாலை துவங்கிய கும்பாபிஷேக விழாவில் விநாயகர் வழிபாடு இரண்டாம் கால யாக பூஜை நாடி சந்தானம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனிதநீரை கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கும்பாபிஷேக விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story






