சின்னகண்ணுபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம்!

X
தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி. கீதா ஜீவன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி ஆகியோரின் ஆணைப்படி, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று சின்னகண்ணுபுரத்தில் நடைபெற்றது. இந்த முகாம் 14-வது வார்டு திமுக வட்ட செயலாளர் திரு. பா. காளிதுரை அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்று, பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்து பயனடைந்தனர். மருத்துவ முகாமில் பொதுமருத்துவம், கண் பரிசோதனை, பல் பரிசோதனை, இரத்த அழுத்தம், நீரிழிவு, பெண்கள் நலச் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மருத்துவர்கள் சேவை வழங்கினர். பொதுமக்களின் நலனை முன்னிலைப்படுத்தி, அனைத்து வார்டுகளிலும் இதுபோன்ற சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story

