எலச்சிபாளையம் ஒன்றியம் இலுப்புலி கிராமத்தில் குளத்து வலவு பகுதியில்இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Tiruchengode King 24x7 |24 Oct 2025 5:12 PM ISTதிருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியம் இலுப்புலி கிராமம் குளத்துவலவில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள்பல வருடங்களாக குடியிருந்து வருகின்றனர்.இவர்களுக்கு இலவச வீட்டு நிலம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இலுப்புலி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியம் இலுப்புலி கிராமம் குளத்துவலவில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள்பல வருடங்களாக குடியிருந்து வருகின்றனர்.இவர்களுக்கு இலவச வீட்டு நிலம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இலுப்புலி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலுப்புலி கிராமம் குளத்துவலவு அருந்ததியர் தெருவில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர் குடியிருப்பு அருகில் இலுப்புலி 150 ஏக்கர் ஏரி உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மண் சுவர்கள் இடிந்து படிப்படியாக அரித்து கொண்டே உள்ளன சாலை வசதி. சாக்கடை வசதி இல்லாததால் மழை நீர் சூழ்ந்து சேரும் சகதியுமாக மழை காலங்களில் மாறியுள்ளன தொடர்ந்து குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்ட வண்ணம் உள்ளன இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குளத்து வலவுபொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை நிலம் வேறு இடத்தில் வழங்க வேண்டும். கலைஞர் கனவு இல்லம் மூலம் வீடுகள் கட்டி தர வேண்டும். இவ்வூரில் மருத்துவ முகாம் அமைத்து கை கால்கள் தொற்று நோய்கள் ஏற்பட்டு இருப்பதை கவனித்து மருத்துவம் பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் எம்.தங்கவேல் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பி.கிட்டுசாமி . ஆர்.ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.மூத்த தோழர் பெரியசாமி.சிறுபான்மை நலக்குழு உறுப்பினர் பாபு. வாழ்த்தி பேசினார்கள் சத்யாநகர் கிளை செயலாளர் பி.கே . ரவி நன்றி உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் 15 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
Next Story


