ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலய அறங்காவலர் குழு தலைவர் தேர்வு...

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலய அறங்காவலர் குழு தலைவர் தேர்வு...
X
ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலய அறங்காவலர் குழு தலைவர் தேர்வு...
ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலய அறங்காவலர் குழுத் தலைவராக பி.சக்திவேல் வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பிரசித்த பெற்ற வல்வில் ஒரியால் கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீகைலாசநாதர் ஆலய அறங்காவலர் குழு உறுப்பினர்களாக பி.சக்திவேல், டி.டி.ராஜராஜசோழன், சி.நாராயணன், வி.இந்திராதேவி, ஒ.ரேவதி ஆகியோர் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து அறங்காவலர் குழுத் தலைவருக்கான தேர்தல் கோவில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சு.சுவாமிநாதன், பயிற்சி உதவி ஆணையர்கள் மெய்வேல், சிந்து லக்ஷ்மி, ராசிபுரம் சரக ஆய்வாளர் சு. கீதாமணி, ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயில் செயல் அலுவலர் தெ.சவிதா ஆகியோர் முன்னிலையில், இத்தேர்தல் நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஐந்து பேரும் அலுவலர்கள் முன்னிலையில் ரகசிய வாக்களித்தனர். இதில் பி.சக்திவேல் ரகசிய வாக்கெடுப்பில் அறங்காவலர் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, ராசிபுரம் நகர மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர், நகர திமுக செயலாளர், என்.ஆர்.சங்கர், தொழிலதிபர் பாலசுப்பிரமணி, சிட்டி வரதராஜன், எஸ்.பாலாஜி, கோவில் சிவாச்சாரியார்கள் தட்சிணாமூர்த்தி, மதுதில்லைநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story