காவிரியில் வெள்ளப்பெருக்கு மூலம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

Komarapalayam King 24x7 |24 Oct 2025 8:01 PM ISTகுமாரபாளையம் காவிரி கரையோர பகுதி மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, கர்நாடாக அணைகள் நிரம்பியுள்ளது. இதனை அடுத்து அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதால், மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. எனவே கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் வரும் சுமார் 55 ஆயிரம் கன அடி நீர் பாசன கால்வாய் மற்றும் மேட்டூர் அணையின் 16 கண் மதகு மூலமும் வெளியேற்றப்படுவதால், நாமக்கல் மாவட்டம் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்களை மேடான பகுதிகளுக்கு தங்கள் உடைமைகளுடன் செல்ல குமாரபாளையம் நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினருடன் இணைந்து ஒளிபெருக்கி மூலம் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய மணிமேகலைத் தெரு, இந்திரா நகர், அண்ணா நகர் மற்றும் கலைமகள் வீதி, பொன்னியம்மாள் சந்து உள்ளிட்ட பகுதிகளில் எச்சரிக்கை செய்ததுடன் அவர்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டது.
Next Story
