போச்சம்பள்ளி அருகே மனைவியை கொன்ற வழக்கில் கணவன் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் அடுத்த புங்கம்பட்டி கருவேப்பிலை கொட்டாய் பகுதியில் சந்திரன் அவரது மனைவி கோவிந்தம்மாள் இரண்டு பேரும் ஈச்சம் ஓலைகளை அறுத்து துடைப்பம் தயாரித்த போது ஏற்பட்ட தகராறில் மனைவியை கொலை செய்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை முடிந்த நிலையில் சந்திரனை பாரூர் போலீசார் கைது செய்தனர்.
Next Story

