புதுக்கோட்டை: குளத்தில் மூழ்கி குழந்தை பரிதாப பலி
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா காக்கமங்களம் பகுதியில் வீட்டின் அருகே நேற்று விளையாடிக் கொண்டிருந்த எட்வின் என்பவரது 1 1/5 வயது மகள் பெரனீஷ் வீட்டின் அருகில் இருந்த குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்களும், உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். இதுகுறித்து மணமேல்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story





