கோவை: மது போதையில் சென்ற மாணவர்கள் - ஒருவர் கவலைக்கிடம்!

கோவை: மது போதையில் சென்ற மாணவர்கள் - ஒருவர் கவலைக்கிடம்!
X
மது போதையில் சென்ற மாணவர்களின் வாகனம் சாலையின் சென்டர் மீடியன் தடுப்பு சுவரில் மோதி விபத்து.
கோவை கொடிசியா அருகே மது போதையில் இருசக்கர வாகனத்தில் நேற்று சென்ற மூன்று கல்லூரி மாணவர்கள், சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி கடுமையான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உயிர் பிழைக்கப் போராடி வருகிறார். மற்ற இருவர் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குப் பின், வழியாகச் சென்ற ஒருவர் காட்சியை செல்போனில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story