மின்கட்டணம் அதிகம் – திமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி பரபரப்பு

மின்கட்டணம் அதிகம் – திமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி பரபரப்பு
X
கோவில்பட்டியில் மின்கட்டணம் அதிகம் – திமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சபரி ராஜன்(57). இவரது மனைவி காளிஸ்வரி, சபரி ராஜன் எல்.ஐ.சி அலுவலகத்திற்கு அருகே டீ கடை நடத்தி வருகின்றனர். மேலும் 4வது வார்டு திமுக கிளை செயலாளராக இருந்து வருகிறார். இவரது வீட்டின் கீழ்பகுதியில் சபரி ராஜனும், மேல் பகுதியில் அவரது மகள் நாகலட்சுமி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்சார வாரிய அதிகாரிகள் இரு மின் இணைப்பையும் ஒன்றாக இணைத்துள்ளனர். இதை தொடர்ந்து வழக்கத்தைவிட மின்கட்டணம் அதிகமானதை தொடர்ந்து சபரி ராஜன் இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்துள்ளார். தனித்தனியாக இருந்தபோது வழக்கமாக ஆயிரம் ரூபாய் முதல் 1500 வரை மின் கட்டணம் வந்த நிலையில் இரு மின் இணைப்பையும் ஒன்றாக இணைத்த போது ரூ.2000 வந்துள்ளது. தானும் தனது மகளும் தனித்தனியாக இருப்பதாகவும், அதற்கான ஆவணங்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பித்து வழக்கம்போல இரு மின் இணைப்புகளாக மின் கணக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை அளித்துள்ளார். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின் கணக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூபாய் 8000 மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்த சபரி ராஜன் தனது மனைவி காளீஸ்வரி உடன் கோவில்பட்டி மின்சார வாரியம் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் இளநிலை உதவி பொறியாளர் மாரிமுத்து பேச்சுவார்த்தை நடத்தினார். நீங்கள் மின்கட்டணத்தை கண்டிப்பாக வேண்டும் வேறு வழியில்லை என்று கூறியதும், தன்னுடைய வீட்டிற்கு அவ்வளவு மின் கட்டணம் வராது, தன்னால் ரூ.8000 மின்கட்டணம் கட்டும் அளவிற்கு வசதி இல்லை என்று கூறி தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த மின்வாரிய ஊழியர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி அமைதி படுத்தினார். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலைக்கு முயன்ற சபரி ராஜன் மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். மனு கொடுத்தால் ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து தருவதாக மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தை தொடர்ந்து சபரி ராஜன் தனது போராட்டத்தினை கைவிட்டார். இதனால் மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது
Next Story