கோவை: காட்டுப்பன்றிகள் தொல்லை குறித்து மனு !

கோவை: காட்டுப்பன்றிகள் தொல்லை குறித்து மனு !
X
விவசாயிகள் நலன் காக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டரிடம் தளபதி முருகேசன் கோரிக்கை.
கோவை, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி கிணத்துக்கடவு ஒன்றியம் கோதவாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் கடும் சேதம் விளைவிப்பதாக விவசாயிகள் முறையிட்டனர். இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை முன்வைத்து கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன், மாவட்ட கலெக்டர் பவன்குமாரிடம் மனு அளித்தார். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அப்போது முன்னாள் ஊராட்சி தலைவர் ரத்தினசாமி, பொதுக்குழு உறுப்பினர் ரகுதுரைராஜ், கிளை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story