சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் அவதி.

X
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் பேருந்து நிறுத்தப் பகுதியில் தொடர் மழை காரணமாக சாலையின் நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் பள்ளி மற்றும் அருகில் வைகை ஆற்று மேம்பாலம் மற்றும் முக்கியமான ஆன்மீக தலங்கள் உள்ளதால் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கூடும் இடமான இந்த சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் மற்றும் மாணவிகள் பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
Next Story

