ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் பண்டிகை அகரம். வெள்ளாஞ் செட்டியார் சமூகம் சார்பில் அம்மன் சிறப்பு அலங்காரம்...

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் பண்டிகை அகரம்.   வெள்ளாஞ் செட்டியார் சமூகம் சார்பில் அம்மன் சிறப்பு அலங்காரம்...
X
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் பண்டிகை அகரம். வெள்ளாஞ் செட்டியார் சமூகம் சார்பில் அம்மன் சிறப்பு அலங்காரம்...
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் திருத்தேர் விழா ஐப்பசி மாத பண்டிகை பூச்சாட்டுதல் உடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் சிறப்பு அலங்காரங்கள் பல்வேறு கட்டளைதாரர்களால் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராசிபுரம் அகரம் வெள்ளாஞ் செட்டியார் சமூகத்தின் சார்பில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு வான வேடிக்கையுடன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. மேலும் லட்சுமி, சரஸ்வதி, அன்னபூரணி, பெருமாள், நரசிம்மர், போன்ற பல்வேறு அம்மன் வேடம் அணிந்து ராசிபுரம் முக்கிய வீதி வழியாக மின் அலங்காரத்தில் ஊர்வலம் வந்தனர். மேலும் சிறுவர் சிறுமியர் ஆண்கள் பெண்கள் என அனைவரும் உற்சாகமாக மேள தாளங்கள் முழங்க ஆடி பாடி உற்சாகமாக திருவிழாவை கொண்டாடினர்.
Next Story