ஓசூர் அருகே மதுபாக்கெட், குட்கா கடத்தியவர் கைது.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் சிப்காட் போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழி யாக ஓசூர் நோக்கி வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி போலீ சார் சோதனை செய்தனர்.இதில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 440 மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 720 மதிப்பிலான கர்நாடக மது பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஆரணிக்கு கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது. இதை அடுத்து ஆரணி பகுதியை சேர்ந்த ஆரிப் பாஷா (35) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து குட்கா, கர்நாடக மது பாக்கெட்டு மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story

