பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுவதாக புகார்

பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுவதாக புகார்
X
தூத்துக்குடியில் லைன்ஸ்வுண் பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற முயற்சி செய்வதாக இந்திய லஞ்ச ஒழிப்பு மைய சேர்மன் லஞ்ச ஒழிப்பு பாபு விடம் பெண்கள் புகார் தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் லைன்ஸ்வுண் பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற முயற்சி செய்வதாக இந்திய லஞ்ச ஒழிப்பு மைய சேர்மன் லஞ்ச ஒழிப்பு பாபு விடம் பெண்கள் புகார் தெரிவித்தனர். அகில இந்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழு சார்பில் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அகில இந்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழு மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய லஞ்சம் ஒழிப்பு மைய சேர்மன் லஞ்ச ஒழிப்பு பாபு கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது நாங்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் குடியிருப்பில் இருந்து தங்களை வெளியேற்ற முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினர் அவர் மனுவை பெற்றுக் கொண்டு தாங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து உங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன் என்றார். மேலும் லஞ்சம் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்க தான் பாடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Next Story